புரட்சி

புரட்சி என்பது வாலிபத்தின் கூறு பகுத்தறிவாளர் ஆயுதம்.

பழைமை விரும்பிகள், புரட்டர்கள், எதேச்சதிகாரிகள் ஆகியோருக்கு நஞ்சு.

மக்களின் மகத்தான சக்தி. அதைப் பொசுக்கிவிட எவராலும் முடியாது.

அறிஞர் அண்ணா

ஒழுக்கம்

மற்றவர்கள் உங்களிடத்தில்

எப்படி நடந்து கொள்ள

வேண்டும் என்று நீங்கள்

விரும்புகிறீர்களோ

அப்படி நீங்கள் மற்றவர்களிடம்

நடந்து கொள்வதற்குப்

பெயர்தான் ஒழுக்கம்

தந்தை பெரியார்

லட்சியம்

ஒரு மனிதன் வாழ்ந்தான்....

லட்சியத்துக்காக

உயிரை விட்டான்

என்பதைவிட வேறென்ன

பெருமை வேண்டும்!

நேதாஜி

தெய்வம்

நான் வணங்கும் தெய்வங்கள்

மூன்று

முதலாவது அறிவு

இரண்டாவது சுயமரியாதை

மூன்றாவது நன்னடத்தை

இவற்றைத் தவிர வேறு

தெய்வங்கள் எனக்கு இல்லை

டாக்டர் அம்பேத்கர்

இன்றைய சிந்தனைக்கு : தோழர்கள்

உலகின் எங்கோ ஒரு மூலையில்

நடக்கும் அநியாயத்தைக் கண்டு

உங்கள் மனம் கொதித்தால்

நாம் இருவரும் தோழர்களே

சே குவரே

If you tremble with

indignation at every injustice

Then you are a comrade of mine

CHE GUEVARA

வ‌ல்ல‌வன்

ல்லனுக்கு

நலம் க்கும்

என மட்டும் ம்பாது

ல்லவனாயும்

வாழ்ந்துவிடு பாப்பா

பாரதியார்

உதவி

உதவும் கரங்கள்

ஜெபிக்கும்

உதடுகளைவிடச்

சிறந்தது.

அன்னை தெரஸா.

ஊக்குவிப்பு

"ஊக்குவிக்க ஆளிருந்தால்

ஊக்கு விற்கும் ஆள் கூடத்

தேக்கு விற்பான்!"

கவிஞர் வாலி

நம்பிக்கை

நட்பு என்பதும் நம்பிக்கை

கற்பு என்பதும் நம்பிக்கை

முயற்சி என்பதும் நம்பிக்கை

நாம் மூச்சு விடுவதும் நம்பிக்கை

கவிஞர் வைரமுத்து

இறைவன்

"இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை.
ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்."
-
நபிகள் நாயகம்

அறிவு & செல்வம்


நம்ம ஊரு விஞ்ஞானி
கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும்
இறுதி காலம் வரை
பிறருக்காகச் செலவிடுங்கள்
ஜி.டி. நாயுடு



தோற்றம்

”ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ
அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம்.
ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!”
-தாகூர்



எண்ணங்கள்

நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால்,
நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும்.
நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால்,
நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்
- ஆப்ரகாம் லிங்கன்

பிராத்தனை

பிராத்தனை
என்பது
கடவுளிடம்
எதாவது
கேட்பதல்ல

அது ஆத்மாவின் ஏக்கமாகும்

வெற்றி

தூய்மை
பொறுமை
விடாமுயற்சி
"ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையதவையாகும்"

சுவாமி விவேகானந்தர்

தட்டிக் கொடுப்பது


பிறர் முத்துக்கு பின்னால்
நாம்
செய்ய வேண்டிய
வேலை
"தட்டிக் கொடுப்பது மட்டும் தான்"

விவேகானந்தர்